நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாக இருந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தள்ளிவைப்பு

புதுடெல்லி: நாடாளு​மன்​றத்​தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதா தாக்கல் செய்​யப்​படுவதை மத்திய அரசு தள்ளி​வைத்​துள்ளது.

நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்​கிய​தில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்​பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடுபட்டன. அதன்​பிறகு நடைபெற்ற கூட்​டங்​களில், இந்தியா​வுக்கு எதிராக செயல்​படும் சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்​புக்கு (ஓசிசிஆர்பி) நிதி​யுதவி அளிக்​கும் அமெரிக்க தொழில​திபர் ஜார்ஜ் சோரஸுடன் நேரு குடும்பத்​துக்கு நீண்​டகால உறவு இருப்​பதாக காங்​கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்​டியது. இதனால் நாடாளு​மன்​றத்​தில் அமளி நீடித்​தது.

இதற்​கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்​சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்​தது. நாடாளு​மன்​றத்​தில் இந்த மசோதா விரை​வில் தாக்கல் செய்​யப்​படும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

எம்.பி.க்களுக்கு மசோதா நகல்: மக்களவை​யில் ஒரேநாடு, ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்​வால் டிசம்பர் 16-ம் தேதி (இன்று) தாக்கல் செய்​வார் என முதலில் அறிவிக்​கப்​பட்​டது. நாடாளு​மன்ற நடைமுறைப்​படி, எம்.பி.க்​களுக்கு இந்த மசோதாக்​களின் நகல் கடந்த வாரம் வழங்​கப்​பட்டன. இந்த நிலை​யில், நாடாளு​மன்ற அலுவல் தொடர்பாக மாற்றியமைக்​கப்​பட்ட பட்டியலை மக்களவை செயலகம் வெளி​யிட்​டுள்​ளது.

அதில், ‘துணை மானிய கோரிக்கைகள் குறித்து மக்களவை​யில் 16-ம் தேதி (இன்று) விவா​திக்​கப்​படும்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. துணை மானியகோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, இந்த வாரத்​தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்​யப்​படும் என மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்ளன. மசோதா ​தாக்​கல் தள்​ளிவைக்​கப்​பட்​டதற்கான ​காரணம் தெரிய​வில்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.