கோடிகளில் வருமானம் பெரும் யூடியூபர்கள்! விஜே சித்து, மதன் கவுரிக்கு எத்தனாவது இடம்?

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லாக்டவுனுக்கு பிறகு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யூடியூப் மூலம் தங்களது தனிப்பட்ட திறமைகளை காட்டி, அதிக வருமானம் பெரும் நபர்களும் இருந்து வருகின்றனர். சமையல், பொழுது போக்கு, டீச்சிங், டுடோரியல், Vlog, டெக் என பல விதங்களில் மக்கள் யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு வருமானம் பெறுகின்றனர். யூடியூபில் வீடியோக்கள் பதிவிடுவதை முழு நேர வேலையாக சிலர் கொண்டிருந்தாலும் அவர்களில் சிலர் மட்டுமே அதிக வருமானம் பெறுகின்றனர். மற்றவர்களை பார்த்து காப்பி அடிக்காமல், தனித்துவமான பாணியை கொண்டுள்ளவர்களை மக்கள் அதிகம் ரசிக்கின்றனர். இது போல் கன்டென்ட் கொடுக்கும் நபர்களுக்கு அதிக சப்ஸ்கிரைபர்களும் கிடைக்கிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் யூடியூப் மூலம் அதிக வருமானம் பெற்ற 4 யூடியூபர்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்களை பற்றி பார்ப்போம்.

கௌரவ் சவுத்ரி (Technical Guruji)

Technical Guruji என்று அழைக்கப்படும் கௌரவ் சவுத்ரி இந்தியில் தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பதிவிடுவதில் முக்கியமான ஒருவராக உள்ளார்.  ராஜஸ்தானின் பிறந்த இவர் துபாய்யில் BITS பிலானியில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு  யூடியூப் சேனலை தொடங்கிய கௌரவ் ஆரம்பத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சில வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆக தொடங்கியது. 2018ல் 10 மில்லியன் Subscribers கொண்ட முதல் டெக் யூடியூபராக பிரபலமடைந்தார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 356 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பணக்கார யூடியூபர்களில் இவரும் ஒருவர் ஆகும்.

புவன் பாம் (BB Ki Vines)

பிரபல யூடியூபர் மற்றும் இசைக்கலைஞரான புவன் பாம் BB Ki Vines என்ற சேனல் மூலம் பிரபலமானார்.  குஜராத்தை இருந்த இவர், நகைச்சுவை வீடியோக்கள் வீடியோக்கள் மூலம் யூடியூபில் நுழைந்தார். புவனின் தனித்துவமான கதைசொல்லல் மற்றும் நகைச்சுவை மக்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது 26 மில்லியன் Subscribers-களை கொண்டுள்ளார். அதன் பிறகு இசைப்பக்கம் திரும்பிய இவர் பல தனிப்பாடல்களை வெளியிட்டார். புவன் பாமின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 122 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. யூடியூப் தாண்டி சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அமித் பதனா (Amit Bhadana)

அமித் பதானா இந்தியாவின் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவராக உள்ளது. டெல்லியை சேர்ந்த இவர் 2012ம் ஆண்டு யூடியூபில் தனது பயணத்தை தொடங்கினார். தனது தனித்துவமான கன்டென்ட் மூலமும், நகைச்சுவை வீடியோக்கள் மூலமும் 2017 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமடைந்தார். 24 மில்லியனுக்கும் அதிகமான Subscribers-களை கொண்டுள்ளார் அமித். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 80 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. யூடியூப்பைத் தவிர, அமித் பதனா நடிப்பு மற்றும் பிராண்ட் ஒப்புதல்களில் நிறைய சம்பாதிக்கிறார்.

அஜய் நகர் (CarryMinati)

CarryMinati என்று வட இந்தியாவில் பிரபலமான சேனல் ஆகும். நகைச்சுவை வீடியோக்கள் மற்றும் கேமிங் தொடர்பான வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றார் அஜய் நகர். ஹரியானாவை சேர்ந்த அஜய் நகர் பள்ளியில் படிக்கும் போதே யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். மற்ற யூடியூபர்கள் மற்றும் பிரபலங்களை கலாய்த்து வீடியோக்கள் பதிவிட்டு புகழ் பெற்றார். லாக்டவுன் சமயத்தில் அவரது ஒரு வீடியோ மிகவும் பிரபலமானது, இதனால் இந்திய முழுவதும் தெரிந்த யூடியூபராக மாறினார். 43 மில்லியனுக்கும் அதிகமான  Subscribers-களை கொண்டுள்ளார். அஜேயின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 50 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.