தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் ஸ்ரீ தேஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதை எதிர்த்து, அல்லு அர்ஜூன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத் காவல்துறை, நடிகர் அல்லு அர்ஜுனை வெள்ளிக்கிழமை கைது செய்து, கீழ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி அவரை விடுவித்தது.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவன் ஸ்ரீ தேஜ் பற்றி ஆழ்ந்த கவலையில் இருக்கிறேன். நடந்துகொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் அவரையும், அவரின் குடும்பத்தாரையும் என் பிரார்த்தனையில் நினைவுகொள்கிறேன். அவரின் மருத்துவ செலவு உள்ளிட்ட அவரின் குடும்பத் தேவைகளுக்கு பொருப்பெறக்கிறேன். சிறுவன் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விரைவில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…