ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் பூஜையில் கலந்து கொண்ட இளையராஜா கோயிலின் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார். இந்த விவகாரம் இன்று ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த கோயில் நிர்வாகிகள் கோயிலுக்குள் ஜீயர்கள், பட்டர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட இடத்தில் இளையராஜா அதை உணராமல் அங்கு செல்ல முயன்ற நிலையில் அவருக்கு அதுகுறித்து அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவர் உள்ளே நுழையாமல் தனக்கான இடத்தில் நின்று சாமி தரிசனம் செய்தார் […]