Bigg Boss Exclusive: “எனக்கு நெருக்கமானவங்க என்னை சொதப்பவிடணும். அப்போதான்..!" – ஆனந்தி பேட்டி

பிக் பாஸ் சீசன் 8, 70 எபிசோடுகளைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கடைசி கட்டத்தை எட்டிவிட்டதால் விஜய் சேதுபதியும் நேற்று போட்டியாளர்களிடம் `ஒன் – ஒன்’ நேர்காணல் வைத்துப் பேசியிருந்தார். கடைசி நேரம் என்பதைக் கருத்தில் கொண்டு முனைப்பாக விளையாட்டில் களமிறங்கப்போவதாக அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

இந்த சீசனின் முதல் டபுள் எவிக்‌ஷனில் ஆனந்தியும், சாச்சனாவும் வெளியேறியிருந்தார்கள். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆனந்தியைச் சந்தித்து அவருடைய பிக் பாஸ் பயணம் குறித்தும் மற்ற போட்டியாளர்கள் கேம் ப்ளே குறித்தும் பேசினோம்.

முதலில், தர்ஷிகாவினுடைய எவிக்‌ஷனுக்கு அவர் திசை மாறினது ஒரு காரணமென நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினோம். இதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக அதுவும் ஒரு காரணம். நான் இதுல ஆண் பெண் அப்படிங்கிற அடிப்படைல சொல்லல.

ஒருத்தர் இன்னொருத்தர்கூட நெருக்கமாக பழகும்போது கண்டிப்பாக அது நம்ம விளையாட்டை பாதிக்கும். இப்போ டெவில் – ஏஞ்சல் டாஸ்க்ல அன்ஷிதா எனக்காக வந்தாங்க. அவங்க எனக்காக வந்த விஷயமும் என்னுடைய விளையாட்டை பாதித்தது. அந்தப் பாசம் காட்டுறதுக்கான இடம் இது இல்ல. நான் இந்த விஷயத்தை என்னுடைய நிதர்சன வாழ்க்கையிலும் பின்பற்றணும்னு நினைக்கிறேன்.

எனக்கு நெருக்கமானவங்க என்னை சொதப்பவிடணும். அதுல இருந்து என்னை கத்துக்கவிடணும்.” என்றவர் ரஞ்சித் தொடர்பாக பேசினார். “ரஞ்சித் சார் ரியலாக இல்லைனு எனக்குத் தோனுது. ஆனால், நான் ஃபேக்குன்னு சொல்லமாட்டேன். அவர் உண்மையாகவே இப்படிகூட இருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியல.ஒரு பிரச்னை வரும்போதுதான் அந்தப் போட்டியாளர் யாரு, அவருடைய நிலைபாடு என்னனு நமக்குத் தெரியவரும். ஆனால், ரஞ்சித் சாருடைய நிலைப்பாடு என்னனு எனக்கு தெரியவே இல்ல. அவருக்கு எந்த விஷயம் அதிருப்தியைக் கொடுக்குது.

எந்த விஷயம் சாதகமாக இருக்குன்னு அவர்கிட்ட தெரியாதபோது ஒரு போட்டியாளராக அவர் எப்படினு எனக்குத் தெரியாம போயிடுச்சு.” என்றவர் செளந்தர்யா குறித்துப் பேசுகையில், “ நான் வீட்டுக்குள்ள இருக்கும்போது போட்டியாளர்கள் எல்லோர் மேலையும் மரியாதை இருந்தது. இப்பவும் இருக்கு. ஆனா, இப்போ செளந்தர்யா மேல இருக்கிற மரியாதை போச்சு. வெளில வந்ததுக்குப் பிறகுதான் அவருடைய நெகடிவ் பி. ஆர் வேலைகளெல்லாம் தெரிஞ்சது. அந்த விஷயத்துல எனக்கு உடன்பாடு இல்ல. ” எனக் கூறினார்.

முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.