வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக செயின்ட் வின்சென்ட்டில் நடந்த காலாண்டு செய்தியாளர் மாநாட்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் இயக்குனர் மைல்ஸ் பாஸ்கோம்ப் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான டேரன் சமி, கடந்த 2023 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒயிட்-பால் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். முன்னதாக 2014 மற்றும் 2016 -ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே கேப்டன் எனும் சாதனையை டேரன் சமி நிகழ்த்தி இருந்தார்.