மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 7,368 கனஅடியாக அதிகரிப்பு

மேட்​டூர்​/தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்​துள்ளது.

காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரிக்​கும். இந்நிலை​யில், அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 7,148 கனஅடியாக இருந்த நீர்​வரத்து நேற்று 7,368 கனஅடியாக அதிகரித்​தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்​வாய் பாசனத்​துக்கு 300 கனஅடி தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்​பைவிட நீர்​வரத்து அதிகமாக உள்ள​தால் அணையின் நீர்​மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்​மட்டம் நேற்று 118.53 அடியாக​வும், நீர்​இருப்பு 91.46 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 13-ம் தேதி காலை விநாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நீர்​வரத்து 14-ம் தேதி காலை 8,000 கனஅடியாக அதிகரித்​தது. நேற்று வரை அளவில் ​மாற்​றமின்றி 8,000 க​னஅடி​யாகவே நீர்​வரத்து தொடர்​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.