கொல்கத்தா ,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி – பஞ்சாப் எப்.சி அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . ஈஸ்ட் பெங்கால் அணியில் ஹிஜாஜி மாஹீர், விஷ்ணு , சுரேஷ் மெல்லை, டேவிட் லாஹலசங்கா ஆகியோர் கோல் அடித்தனர். பஞ்சாப் அணியில் ஆஷ்மீர், இசக்கியல் விடல் ஆகியோர் கோல் அடித்தனர் .
Related Tags :