சிரியாவிலிருந்து ரஷ்யா தப்பிச் சென்ற ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை எடுத்து சென்றார்

டமாஸ்கஸ்: சிரி​யா​வில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்​தது. ஆசாத் படைகளுக்​கும் கிளர்ச்சிப் படைகளுக்​கும் இடையே பல ஆண்டு​களாக போர் நடைபெற்​றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலை​யில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்​துக்கு எதிராக மிகப்​பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்​சிப் படை தொடங்​கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா ராணுவம் பின்னடைவை சந்தித்​தது. இதனால் முக்கிய நகரங் களை கைப்​பற்றிய எச்டிஎஸ் வீரர்​கள், தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8-ம் தேதி கைப்​பற்றினர். இதையடுத்து, ஆசாத் ரஷ்யா​வுக்கு தப்பிச் சென்​றார். இந்நிலை​யில், பஷார் அல் ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை ரஷ்யா​வுக்கு எடுத்​துச் சென்​றுள்ள​தாகக் கூறப்​படு​கிறது. இந்தத் தொகையை கடந்த 2018 மற்றும் 2019 காலகட்​டத்​தில் ரஷ்யா​வுக்கு அனுப்பி வைத்​திருப்​பதாக தகவல் வெளி​யாகி உள்ளது.

மாஸ்​கோ​வின் நுகோவோ விமான நிலையம் சென்​றடைந்த கரன்​சிகள் அந்நாட்டு வங்கி​களில் டெபாசிட் செய்​யப்​பட்​ட​தாக​வும், ஆசாத்​தின் உற​வினர்​கள் இதே ​காலத்​தில் ரஷ்​யா​வில் ரகசி​யமாக சொத்துகளை வாங்​கிய​தா​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.