iPhone 16 Price Drop: ஐபோன் 16 அறிமுகமாகி சில மாதங்களே ஆகியுள்ளன. தற்போது அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது. இப்போது நீங்கள் அதை கடந்த ஆண்டு ஐபோன் 15 -ஐ வாங்கிய அதே விலையில் வாங்க முடியும். இவ்வளவு குறைந்த விலையில் ஐபோன் 16 -ஐ எப்படி வாங்குவது? இதில் கிடைக்கும் சலுகைகள் என்ன? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் (Amazon) ஐபோன் 16 -இன் விலை பல ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இருப்பினும், பிளிகார்ட்டில் (Flipkart) அதன் விலை இப்போதும் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் இருந்த அளவிலேயே உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 தொடரை ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
iPhone 16: இதில் கிடைக்கும் சலுகை
Amazon இல் iPhone 16 இன் விலை 77,400 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் இதில் 5,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியையும் பெறலாம். அதாவது ஐபோன் 16 ஐ வெறும் 72,400 ரூபாய்க்கு வாங்கலாம். சுவாரஸ்யமாக, 256 ஜிபி கொண்ட ஐபோன் 15 அதே விலையில் கிடைக்கிறது. நீங்கள் AI பொருத்தப்பட்ட iPhone 16 ஐ வாங்க விரும்பினால், இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
iPhone 16: அம்சங்கள்
iPhone 16 ஆனது 128GB, 256GB மற்றும் 512GB ஆகிய மூன்று சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. இதில் ‘ஆப்பிள் இன்டலிஜென்ஸ்’ அம்சம் உள்ளது. மேலும் இதில் புதிய கேப்சர் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. இது 6.1 அங்குல திரை மற்றும் ‘டைனமிக் ஐலேண்ட்’ இடைமுகம் கொண்டது. இந்த ஃபோன் A18 பயோனிக் சிப்பில் இயங்குகிறது. மேலும், இது iOS 18 இயங்குதளத்தில் வேலை செய்கிறது.
ஐபோன் 16 இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது
– ஒன்று 48MP பிரதான கேமரா. இதில் ஜூம் வசதியும் உள்ளது.
– மற்றொன்று, 12MP அல்ட்ரா-வைட் கேமரா.
செல்ஃபி எடுக்க 12எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 16 இன் பேட்டரி கடந்த ஆண்டு மாடலை விட சிறப்பாக உள்ளது. மேலும் இது வேகமாக சார்ஜ் செய்கிறது.
ஐபோன் 15: சலுகைகள்
ஐபோன்களில் மிக அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டில் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் மீண்டும் ஐபோன் 15 -இன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தள்ளுபடியை முந்தைய விற்பனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த சலுகை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் நீங்கள் விரும்பினால், சாதனத்தை மிகவும் மலிவான விலையில் இதில் வாங்கலாம். ஐபோனுக்கு சேலில் ரூ.8,901 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. சம்பர் 18ஆம் தேதி, அதாவது இன்று வரை பிளிப்கார்ட்டின் இந்த சேல் நடைபெறும்.