சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவிடம் டிடிவி தினகரன் சரண் அடைந்துள்ளார் என விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம், “பா.ஜ.க. அல்லாத மற்ற எந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்களுடன் கூட்டணி நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை என்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை எங்கள் […]