Tech Tips: மொபைல் இண்டர்நெட் வேகத்தை எகிற வைக்க… சில டிப்ஸ்

தற்போதையை அதிக வேக இண்டர்நெட் உலகத்தில், இணைய வேகம் குறைவாக இருந்தால், சிக்கல்கள் ஏற்படலாம். ஏனெனில், இண்டநெட் நமது வாழ்க்கைக்கான ஆதாரமாக ஆகிவிட்டது. தூக்கி எழுந்தது முதல் பஇரவு படுக்கும் வரை பலவிதமான பணிகளுக்கு இண்டர்நெட் வசதி தேவை. பண பரிவர்த்தனை முதல் அலுவலக பணி மட்டுமல்லாது யூடியூப், நெட்ஃபிக்ஸ் அல்லது ஹாட்ஸ்டாரில் வீடியோக்களை பார்த்தல் ஆகியவற்றின் போதும் சிறந்த அனுபவத்தை பெற இண்டர்நெட் ஸ்பீட் என்னும் இணைய வேகம் சிறப்பாக இருக்க வேண்டும். இந்நிலையில், மொபைல் இண்டர்நெட் வேகத்தை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாக அதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இணைய வேகம் குறைவதற்கான சில காரணங்கள்

1. போனில் பின்னணி ஆக்டிவ் ஆக இயங்கும் செயலிகள் அதிக தரவுகளை பயன்படுத்தும் காரணத்தினால், இணைய வேகம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

2. ஃபோன் மெமரி என்னும் தொலைபேசி நினைவகம் நிரம்பியிருந்தால், இணைய வேகம் குறையலாம்.

3. உங்கள் போன் நெட்வொர்க் சிக்னல் பலவீனமாக இருந்தால், இணையம் வேகம் குறைவாக இருக்கலாம்.

4. போனில் அளவிற்கு அதிகமாக கேச் மற்றும் குக்கீஸ் நிறைந்திருந்தாலும் இணைய வேகம் குறையும்.

5. இணைய வசதிக்காக நீங்கள் Wi-Fi நெட்வொர்க் பயன்படுத்தும் நிலையில், அதில் நெட்வொர்க் சிக்கல் இருந்தால் இணைய வேகம் பாதிக்கப்படலாம்.

இண்டர்நெட் வேகத்தை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்

1. சில நேரங்களில், ரீஸ்டார்ட் செய்தல் அல்லது ஏர்பிளேன் மோடு சென்று பின் இயல்பு நிலைக்கு மாற்றினாலே, இணைய வேகம் உட்பட பல சிக்கல்களை சரிசெய்யலாம்.

2. நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க் சிம்மை சிம் ஸ்லாட் 1 வைத்து பயன்படுத்தும் போது, உங்கள் இணைய வேகம் கணிசமாக மேம்படும்.

3. பின்னணியில் இயங்கும் பயன்படுத்தாத எல்லா செயலிகளையும் மூடுவதால், இணைய வேகம் அதிகரிக்கும். 

4. போனில் நினைவகத்தை சீர் செய்ய, தேவையற்ற செயலிகள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நீக்கவும். முக்கியமான தரவுகளை, மைக்ரோ எஸ்டி கார்டுக்கு மாற்றவும்.

5. உங்கள் மொபைலில் டேட்டா சேவர் மோடை ஆக்டிவேட் செய்வதால் பின்னணியில் டேட்டா விரயமாவது குறையும்.

6. Wi-Fi ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், திசைவியை ரீஸ்டார்ட் செய்யவும்.

6. மொபைலையும், அதில் உள்ள செயலிகளையும் அவ்வப்போது அப்டேட் செய்வதும் இணைய வசதியை மேம்படுத்த உதவும்.

7. உங்கள் உலாவியின் அமைப்புகளுக்குச் சென்று டெம்ப்ரெரி பைல்கள் மற்றும் குக்கீகளை நீக்கவும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.