காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி​யில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது.” எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து வடகிழக்கே 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வாய்ப்பு: இன்று தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும் மிதமான மழை பெய்​யக்​கூடும். 22 முதல் 26-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

இதற்கிடையே சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.