சென்னை: “வார்டு மறு வரையறைக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்” நடத்தப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிதாக தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் தமிழ்நாடு அரசு மவுனம் காத்து வருகிறது. இதுவரை […]