DMK: 'பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல' – செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன?

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்…

“கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கண்டனம்.

பேரிடர் நிதி என்பது பா.ஜ.க கட்சியின் நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

டங்ஸ்டன் கனிமம் சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வுக்கு கண்டனம்.

திமுக செயற்குழு

ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்காத காரணத்தால் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதியைத் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் வஞ்சிக்கும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.

குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு.

கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்.

கல்வி வளர்ச்சிக்கு வழங்க வேண்டிய நிதியைப் பாரபட்ச அணுகுமுறையுடன் ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது

மழையின்போது சாத்தனூர் அணையைப் படிப்படியாகத் திறந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குப் பாராட்டுக்கள்

சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்று புறப்படுங்கள்; போர்ப் பரணி பாடுங்கள்.

தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு சமத்துவத்தை நிலைநாட்டச் செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சிப்பதற்காகக் கண்டனம்.” ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.