Siragadikka Aasai: அரங்கேறும் அதிரடி திருப்பம்; வெளிவந்த ரோகிணியின் தில்லுமுல்லு

கடந்த எபிசோடில் (டிசம்பர் 21) ரோகிணி மலேசியா மாமாவிடம் பேசுவது போல் நடித்து வித்யாவிடம் பேசுகிறார். ரோகிணியின் நடவடிக்கையில் மீனாவுக்கும் முத்துவுக்கும் சந்தேகம் வருகிறது. 

மனோஜ் எப்படியாவது வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எனவே கொஞ்சமும் தயக்கமின்றி ஸ்ருதியின் அப்பாவிடம் பண உதவி கேட்கச் சொல்லி ரவியை வற்புறுத்துகிறார்.  ரவி மறுத்துவிடுகிறார். எனக்கு சுயமரியாதை இருக்கிறது, எக்காரணம் கொண்டும் நான் பணத்திற்காக அவர்கள் முன் நிற்கவே மாட்டேன் என ரவி தீர்த்து சொல்லிவிட ஸ்ருதியும் அதையே சொல்கிறார்.

சிறகடிக்க ஆசை

மனோஜ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தன் முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமை என சொல்லி ரோகிணியிடம் புலம்கிறார். ரோகிணியும் அதை ஆமோதிக்கிறார். இவர்களின் பிரச்னையே இதுதான் பணத்துக்காக மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது, உறவுகளை உதாசீனப்படுத்துவது, குடும்ப உறுப்பினர்களை நம்பாமல் இருப்பது, பொய் சொல்வது என தொடர்ந்து ரோகிணியும், மனோஜும் தவறுகளை அடுக்கி கொண்டே போகின்றனர். அதற்கு பிரேக் போடும் விதமாக சம்பவங்கள் நிகழப் போகிறது.

நேற்று வெளியான ப்ரோமோவில், முத்து ஜீவாவை காரில் அழைத்து வருகிறார். அப்போது இருவரும் செல்ஃபி எடுத்து கொள்கின்றனர்.

முத்து போனில் இருந்த ஜீவாவின் புகைப்படத்தைப் பார்த்த சீதா, இது தான் மனோஜின் முன்னாள் காதலி என்று அடையாளம் கண்டுவிட்டார். முத்து ஜீவாவின் வீடு தேடிச் சென்று என் அப்பாவின் ரிட்டர்யட்ட்மென்ட் பணம் எங்கே என்று கேட்க, நான் அதை எப்போதோ கொடுத்துவிட்டேன். ரோகிணியும், மனோஜும் வந்து வாங்கி சென்றனர் என்று உண்மையை உடைக்கிறார். முத்து இதை வீட்டினர் முன்னிலையில் வந்து சொல்லச் சொல்கிறார். அவரும் ஒப்புக் கொள்கிறார்.

சிறகடிக்க ஆசை

இந்த வார எபிசோடுகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மனோஜின் பிசினஸுக்கு ரோகிணியின் அப்பா தான் பணம் கொடுத்தார் என விஜயா கொண்டாடிக் கொண்டிருக்கையில், அது அண்ணாமலையின் பணம் என்பது தெரிய வரும்போது அவரின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மனோஜ் வாங்க இருக்கும் வீட்டின் உண்மையான உரிமையாளர் வந்தால் அவர்களின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.