கீர்த்தி சுரேஷூக்கும் அவருடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலுக்கும் டிசம்பர் 12 ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு சென்ற பிரபலங்கள் தற்போது புகைப்படங்களைப் பகிர்ந்து தற்போது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி , ” என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மணவாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வாழ வாழ்த்துக்கள்!” என்று கீர்த்தி சுரேஷூக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல மாரி செல்வராஜூம், ” நீங்கள் நீண்ட நாளாக இந்தத் தருணத்திற்கு காத்துக்கொண்டிருந்தீர்கள் என்று எனக்கு தெரியும். அந்த மகிழ்ச்சியான தருணம் இப்போது நிறைவேறிவிட்டது. உங்களின் அன்பு எல்லா சந்தோஷங்களிலும், கொண்டாட்டங்களாலும் நிறைந்திருக்கட்டும்” என்று வாழ்த்தி இருக்கிறார்.
வருண் தவானுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பேபி ஜான்’ படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால் திருமணம் முடிந்த கையோடு இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.