சென்னை மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள நிர்பந்தம் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணா நூலகத்தில் கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் ஓவிய கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம், ”பள்ளிக்கல்வித்துறை இணையதளத்திற்கு கட்டணம் செலுத்தவில்லை என்பது தவறு. மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவை […]