சென்னை மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அடிப்படை கூற்றை அழித்துள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-ல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது. குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. […]