`விவசாயிகளுக்கு திசு வளர்ப்பு கன்றுகள்; இஸ்ரோவுடன் இணைந்து ஆராய்ச்சி’ – வாழை ஆராய்ச்சி மைய அப்டேட்

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) வாழை திருவிழா மற்றும் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் சி. வன்னியராஜன், முதல்வர், ADAC & RI, TNAU, திருச்சி, முனைவர் ஜே. ராஞ்சங்கம், முதல்வர், HC & RI, TNAU, பெரியகுளம் மற்றும் முனைவர் ஜே. சுரேஷ், முதல்வர், HC & RI (W), TNAU உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய நிகழ்வு

அதோடு, இந்த நிகழ்ச்சி மூலம் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்த நாளையும், விவசாயிகளின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூரப்பட்டது. தவிர, இந்த விழாவில், விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் உள்பட சுமார் 600 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அதோடு, நிகழ்ச்சியில் வாழை உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், Farmers Extension Linkages குறித்த கருத்தரங்குகள் இடம்பெற்றன. விவசாயிகளுக்கு Pisang Lilin மற்றும் வாழையில் மாவு பூச்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கான சிறப்பு விரிவாக்க வெளியீடுகளும் வெளியிடப்பட்டன.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய நிகழ்வு

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தலைமை விருந்தினராக வருகைதந்த புதுடெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழும, தோட்டக்கலைத்துறை (அறிவியல்), துணை பொது இயக்குநர் முனைவர். சஞ்சய் குமார் சிங், PMFME திட்டத்தின் கீழ் (ரூபாய் 2.50 கோடி) நிதியுதவி செய்யப்பட்ட பொது பதனிடுதல் மையத்தையும் பயிற்சியாளர்களுக்கான விடுதியையும் (ரூபாய் 1.75 கோடி) திறந்துவைத்தார்.

அதன்பிறகு, அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,

”வாழைத் துறையின் ஆராய்ச்சியும், முன்னேற்றமும் மகத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற வாழை வகைகள் இருப்பினும், அவற்றின் முழு திறனை செயல்படுத்தவில்லை. விவசாயிகள் வளர்த்துவரும் வகைகளை PPV & FRA-வின் (தாவர வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் அதிகாரம்) கீழ் பதிவு செய்வது அவசியம். வாழை மதிப்புக் கூட்டபட்ட பொருட்கள், வாழை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகளை மேம்படுத்தியதற்காக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய நிகழ்வில்..

அதோடு, அவர், மின்-வணிக இணையதளம் மற்றும் International Society for Banana and Plantains சங்கத்தை தொடக்கி வைத்தார். மேலும், இவ்விழாவில் SCSP திட்டத்தின் கீழ் திசு வளர்ப்பு வாழைக் கன்றுகள் பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

அதன்பிறகு, பேசிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. செல்வராஜன், ”தானியங்கி மற்றும் உணரிகள்(Sensor) அடிப்படையிலான பாசன முறைகள் வாழை உற்பத்தியை அதிகரித்து, இடுபொருட்களை குறைக்க உதவியிருக்கிறோம். வாழைத் தண்டு சாறு தயாரிப்பு மற்றும் வாழை இலை உற்பத்தி போன்ற சிறு தொழில்முனைவுகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். அதனை, நாங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். அதேபோல், பொது பதனிடுதல் மையத்தின் வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தி, அவர்களது வருமானத்தை உயர்த்த வேண்டும் என இந்த நிகழ்ச்சி மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய ஆராய்ச்சி மைய நிகழ்வில்..

மேலும், பாரம்பர்ய வாழை வகைகளுக்கான திசு வளர்ப்பு கன்றுகளை வணிகரீதியாக தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதையும் இந்த நிகழ்வு வாயிலாக அறிவிக்கிறேன். இந்த ஆண்டில், நுமரன் மற்றும் மனோரஞ்சிதம் ஆகிய விவசாய வகைகள் PPV&FRA-யில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இஸ்ரோவுடன் இணைந்து புதிய ஆராய்ச்சி திட்டங்களை தொடங்க இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.