குளிர்காலத்தில் பிளிப்கார்ட் அட்டகாசம்: வெறும் ரூ.3499 -க்கு அசத்தலான கீசர்கள்

Flipkart Big Saving Days 2024: ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஃப்ளிக்பார்ட்டில் வாடிக்கையாளர்களுக்காக Flipkart பிக் சேவிங் டேஸ் 2024 விற்பனை நடந்து வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கிய இந்த பிளிப்கார்ட் விற்பனை டிசம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது ஆயிரக்கணக்கான பொருட்கள் மலிவாக விற்கப்பட்டு வருகின்றன. எனினும், இதில் கீசர்களின் சேல்  பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. விற்பனையில் விலையுயர்ந்த கீசர்களை பாதி விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஃபிளிப்கார்ட் சேலுக்காக பாங்க் ஆஃப் பரோடாவுடன் கைகோர்த்துள்ளது. அதாவது ஷாப்பிங் செய்த பிறகு பேங்க் ஆப் பரோடா கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால், 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Thomson Geyser: தாம்சன் கீசர்

பிளிப்கார்ட் விற்பனையில், இந்த 15 லிட்டர் கீசரில் 56 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. அதன் பிறகு இது வெறும் ரூ.3499 -க்கு (எம்ஆர்பி ரூ. 8099) விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த கீசரை இரண்டு வருட உத்தரவாதத்துடன் பெறலாம்.

Orient Electric Geyser: ஓரியண்ட் எலக்ட்ரிக் கீசர்

தாம்சன் கீசர் தவிர, இன்னும் பல மலிவான 15 லிட்டர் மாடல்களும் இந்த சேலில் பம்பர் தள்ளுபடியுடன் விற்பனையில் கிடைக்கின்றன. இந்த 15 லிட்டர் மாடல் 50 சதவீத தள்ளுபடிக்கு பிறகு ரூ.5399க்கு (எம்ஆர்பி ரூ. 10,990) விற்பனை செய்யப்படுகிறது. இந்த கீசர் இரண்டு வருட பிராடெக்ட், இரண்டு வருட வெப்பமூட்டும் எலிமெண்ட் மற்றும் ஐந்து வருட டேங்க் வாரண்டியுடன் வருகிறது.

Sansui Geyser: சான்சுய் கீசர்

இந்த 15 லிட்டர் கீசருக்கு பிளிப்கார்ட் சேலில் 62 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இதன் பிறகு இதன் விலை ரூ.5499 ஆக குறைகிறது (எம்ஆர்பி ரூ. 14,598). இரண்டு வருட வெப்பமூட்டும் உறுப்பு, இரண்டு வருட பிராடெக்ட் மற்றும் ஐந்து வருட டேங்க் உத்தரவாதத்துடன் இதை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

Hindware Geyser: ஹிண்ட்வேர் கீசர்

53 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு, இந்த கீசர் ரூ.6004 -க்கு (எம்ஆர்பி ரூ.12,790) விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிராடெக்ட் இரண்டு வருட தயாரிப்பு, ஏழு வருட டேங்க் மற்றும் மூன்று வருட வெப்பமூட்டும் எலிமெண்ட் உத்தரவாதத்துடன் விற்பனையில் கிடைக்கிறது.

Kenstar Geyser: கென்ஸ்டார் கீசர்

இந்த 15 லிட்டர் கீசரில் 55 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு இந்த கீசர் ரூ.6599க்கு விற்கப்படுகிறது (எம்ஆர்பி ரூ. 14,990).

பிளிப்கார்ட் சேலில் ஏழு வருட டேங்க் வாரண்டி, இரண்டு வருட பிராடெக்ட் உத்தரவாதம் மற்றும் இரண்டு வருட வெப்பமூட்டும் உறுப்பு உத்தரவாதத்துடன் கென்ஸ்டார் நிறுவனத்தின் இந்த கீசரை வாடிக்கையாளர்கள் பெறலாம். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.