ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி மாவட்டத்தில் ஒரு கிராமத்து விவசாய பண்ணையில் நேற்று முன்தினம் ஒரு 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தாள். அவளது தந்தை அருகில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தார். அங்கிருந்த 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், சிறுமி எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டாள். சிறுமியின் அழுகுரல் கேட்டு, அவரது தந்தையும், அக்கம்பக்கத்தில் நின்றவர்களும் கூடி சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
“மேல் மட்டத்தில் இருந்த சிறுமியை மீட்க சுருள் கம்பி முறை பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது பலன் அளிக்காததால், இரும்புத் தட்டில் செய்யப்பட்ட மற்றொரு நுட்பமும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. மீட்பு படையினர் வந்தபின்பு, சிறுமிக்கு சுவாசத்திற்கான காற்றுக் குழாய் இறக்கப்பட்டு, கேமரா உதவியுடன் கண்காணித்து மீட்பு பணிகள் நடந்தது. நேற்று 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. பேரிடர் மீட்பு படையினர், மற்றும் அரசு அதிகாரிகள் சிறுமியை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.