ராவல்பிண்டி,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும்.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் ஜமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். பேட்ஸ்மேனான இவர், 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிகளுக்கான வரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உள்ள நிலையில், இறுதி 4 அணிகளுக்கான வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என அவர் கணித்திருக்கிறார்.
இதன்படி, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என நம்புகிறேன் என யூ-டியூப் சேனல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.