உத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை விரைவாக 100 சதவீதம் அமல்படுத்த அமித்ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி,

நாடு முழுவதும் நடப்பு ஆண்டு ஜூலை 1-ந்தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்தியாவில் சட்ட நடைமுறையை அதிக வெளிப்படை தன்மை, திறம்பட மற்றும் தற்கால சமூக தேவைகளுக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் வகையில் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், உத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றிய மறுஆய்வு கூட்டம் ஒன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று நடந்தது.

இதில், புதிய சட்டங்களானது பாதிக்கப்பட்ட மற்றும் குடிமக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவை என சுட்டி காட்டப்பட்டு உள்ளது. அந்த உணர்வுடன் அவை அமல்படுத்தப்பட வேண்டும் என கூறிய அமித்ஷா, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை சட்டங்களின் முன்னேற்றம் பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்று புஷ்கர் சிங் தமியை, அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று அனைத்து தொடர்புடைய துறை அதிகாரிகளுடனும், வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதன்மை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி உள்ளார். தொழில் நுட்பம் மற்றும் பிற குறைபாடுகளை அரசு சரிசெய்து, இந்த புதிய சட்டங்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

அதிக எண்ணிக்கையிலான எப்.ஐ.ஆர்.கள் பதிவான பகுதிகள், காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் இந்த சட்டங்களை முழு அளவில் அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.