சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. […]