IND vs AUS 4th Test Live Streaming | இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் மூன்று போட்டிகள் முறையே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சீரிஸை முடிவு செய்யும் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர்26 ஆம் தேதியான வியாழக்கிழமை நாளை தொடங்குகிறது. இந்த போட்டி குறித்த முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பார்டர் – கவாஸ்கர் டிராபி இதுவரை
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்த சூழலில் நாளை நான்காவது போட்டி நடக்க இருக்கிறது. முக்கியமான டெஸ்ட் போட்டி, அதாவது கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியை காண சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வார இடைவெளிக்குப் பிறகு இரு அணிகளும் இரண்டு நாட்களில் நேருக்கு நேர் மோதுகின்றன. போட்டியின் லைவ் ஸ்ட்ரீமிங், நேரம் மற்றும் பிற தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.
இந்தியா மற்றும் 4வது டெஸ்ட் போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 முதல் 30 வரை நடைபெறுகிறது.
4வது டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம்
ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு நேரம் இருக்கும். பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கியது. பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது போட்டியின் போது, இந்திய நேரப்படி காலை 5:50 தொடங்கியது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டி காலை 5 மணிக்கு தொடங்கும்
காலை அமர்வு: காலை 5 மணி முதல் 7 மணி வரை, உணவு இடைவேளை : காலை 7 மணி முதல் இரவு 7.40 மணி வரை, பிற்பகல் : காலை 7.40 முதல் 9.40 வரை, டீ டைம்: காலை 9.40 முதல் 10 மணி வரை, மாலை அமர்வு: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை என போட்டிகள் நடக்கும்.
டாஸ் போடப்படும் நேரம்;
நாளை அதிகாலை 4.30 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி லைவ் :
‘பாக்சிங் டே டெஸ்ட்’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் மொபைல் செயலியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த போட்டி தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
4வது டெஸ்ட் போட்டியை எப்படி இலவசமாகப் பார்க்க முடியும்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் போட்டியை இலவசமாகப் பார்க்க முடியாது. டிடி ஃப்ரீ டிஷ் உள்ள பார்வையாளர்கள் இந்தப் போட்டியை டிடி ஸ்போர்ட்ஸில் இலவசமாகப் பார்க்கலாம்.