வங்கதேசத்தவர் இந்தியாவில் ஊடுருவ போலி ஆவணங்களை தயாரித்த 11 பேர் டெல்லியில் கைது

புதுடெல்லி: டெல்​லி​யில் சங்கம் விஹார் பகுதி​யைச் சேர்ந்த சென்டு சேக் என்ற ராஜா கடந்த 21-ம் தேதி கொலை செய்​யப்​பட்​டார்.

இதுதொடர்பாக வங்கதேசத்​தை சேர்ந்த 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் வங்கதேசத்​திலிருந்து போலி ஆவணங்களை பயன்​படுத்தி சட்ட​விரோதமான முறை​யில் இந்தியா​வுக்​குள் நுழைந்து டெல்​லி​யில் சங்கம் விஹார் பகுதி​யில் கடந்த ஓராண்டாக வசித்து வருவது கண்டு​பிடிக்கப்​பட்​டது. மேலும், அவர்கள் உண்மை​யில் வங்கதேசத்தை சேர்ந்​தவர்​கள்​தான் என்ப​தற்கு அடையாளமாக சிப் அடிப்​படையிலான தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்​றிதழை அவர்கள் ஒப்படைத்​தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்​படை​யில், இறந்​தவரின் வீட்டை சோதனை​யிட்​ட​தில் போலியான 21 ஆதார் கார்​டு​கள், 4 வாக்​காளர் அடையாள அட்டை, 8 பான் கார்​டுகள் உள்ளிட்டவை கைப்​பற்​றப்​பட்டன. மேலும், வங்கதேசத்​தவர்கள் இந்தியா​வில் குடியேற இதுபோன்ற போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்திய விசா​ரணை​யில் இதுபோன்ற சட்ட​விரோத குடியேற்​றத்​துக்கான ஆவணங்​கள், தற்காலிக சிம் கார்​டு​கள், பயணத்​துக்கான பணஉதவியை வழங்​கியது தெரிய​வந்​தது. போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய 6 லேப்​டாப், 6 மொபைல்​போன்​கள் உள்​ளிட்ட​வற்றை பறி​முதல் செய்தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.