பயனர்களுக்காக பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. புத்தாண்டை முன்னிட்டு இந்த நிறுவனங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த திட்டங்களில் கால் மற்றும் அதிவேக டேட்டா மட்டும் இல்லாமல் Disney+ Hotstar ஓடிடிக்கான அணுகளும் கிடைக்கிறது. இதில் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் முதல் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளை கண்டு மகிழலாம். இந்த ரீசார்ஜ் திட்டங்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு விலைகளில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அதிவேக டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகல் கிடைக்கிறது.
ரூபாய் 499 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மூன்று மாதங்களுக்கு இலவசம்.
ரூபாய் 869 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் இலவசமாக கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மூன்று மாதங்களுக்கு இலவசம்.
ரூபாய் 3359 திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் இலவசமாக கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கு இலவசம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்ட ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு விலைகளில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அதிவேக டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகல் கிடைக்கிறது.
ரூபாய் 401 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 மாதத்திற்கு இலவசம்.
ரூபாய் 949 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 84 நாட்களுக்கு இலவசம்.
ரூபாய் 999 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 3 மாதங்களுக்கு இலவசம்.
ரூபாய் 2599 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கு இலவசம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான அணுகலை அதன் சூப்பர் ஸ்டார் 300 திட்டத்தின் மூலம் வழங்குகிறது.