அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களை CCTNS என்ற குற்றப்பதிவு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தால் (NCRB) நிர்வகிக்கப்படும் இந்த CCTNS இணையதளத்தை அந்தந்த மாநில குற்றப்பதிவுப் பணியகம் (SCRB) செயல்படுத்தி வருகிறது. […]