சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள விசிக தலைவர் திருமாவளவன் ‘யார் அந்த சார்?’ என்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். […]