இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான வீரராக கேஎல் ராகுல் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் எசஸ்வி ஜெய்ஷ்வாலுடன் இணைந்து ஓப்பனிங் இறங்கினார். அதற்கு முன்பு வரை ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார். முதல் டெஸ்டில் ஓபனராக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி இருந்தார். அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அணிக்கு திரும்பிய பின்பும் ஓப்பனிங் செய்தார்.
பார்டர் கவாஸ்கர் தொடர்
பார்டர் கவாஸ்கர் தொடரில் கேஎல் மொத்தமாக 276 ரன்கள் அடித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து சிறிது நாட்கள் கேஎல் ராகுல் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்து இந்தியா திரும்பி உள்ள வீரர்கள் அனைவருக்கும் சிறிது நாட்கள் ஓய்வு வழங்கப்பட உள்ளது. தற்போது நடைபெற்று வரும் விஜய் அசாரே தொடரில் கர்நாடக அணிக்காக கேஎல் ரகல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. ஜனவரி கடைசி வாரம் தொடங்கும் இரண்டாம் கட்ட ரஞ்சி டிராபி தொடரில் ராகுல் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது பின்னர் முடிவு செய்யப்பட உள்ளது.
பிரசித் கிருஷ்ணா மற்றும் படிக்கல்
பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம் பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா மற்றும் படிக்கல் கர்நாடக அணிக்காக விளையாட உள்ளனர். படிக்கல் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார், அதே சமயம் பிரசித் கிருஷ்ணா கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். வரும் சனிக்கிழமை நடைபெறும் விஜய் அசாரே தொடரில் கர்நாடகா அணி, பரோடா அணிக்கு எதிராக குவாட்டர் பைனல் போட்டியில் விளையாட உள்ளது.
வரும் ஜனவரி 22ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 அணியில் ராகுல் இடம்பெற மாட்டார் என்றும், ஒரு நாள் தொடரில் நிச்சயம் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கேஎல் ராகுல் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சாம்பியன் டிராபி தொடரில் நிச்சயம் கேஎல் ராகுல் இந்திய அணிக்காக விளையாடுவார். கடைசியாக இந்தியா விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுல் விளையாடி இருந்தார்.
KL Rahul is the 1st Choice Wicket Keeper Batter for India in Champions Trophy 2025 – Reports#KLRahul pic.twitter.com/i09CXsnmBL
— KL Rahul Fan (@ImKL01) January 8, 2025