திருப்பதி திருப்பதியில் முகக் கவசம் அணிவதை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுகர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மேலும் 2 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை […]