சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்-நிர்வாகிகள் 20-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ந்தேதியும் வாக்கு எண்ணிகையும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தகவல்கள் வெளியாக உள்ளது. […]