Amazon Great Republic Day Sale: ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் இந்த ஆண்டின் முதல் பெரிய விற்பனையான ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல்’-ஐ அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி நடைபெறுகிறது. அமேசானின் இந்த விற்பனையில் பல வித பொருட்களுக்கு அபாரமான தள்ளுபடிகள் வழங்கப்படும். இந்த சேல் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Amazon Sale: பல வித சலுகைகளை அள்ளிக்கொடுக்கும் அமேசான்
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் அமேசானின் இந்த கிரேட் ரிபப்ளிக் டே சேலுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த விற்பனையின் போது, அமேசான் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பிசி -கள் மற்றும் இன்னும் பல பொருட்களுக்கு பல விதமான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை உபகரணங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளையும் பெறலாம்.
Amazon Offer: அமேசான் தள்ளுபடி
வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு கிரேட் குடியரசு தின விற்பனை ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். சென்ற ஆண்டின் இறுதியில் நடந்த சேல்களில் மலிவு விலையில் பொருட்களை வாங்க தவற விட்டவர்களுக்கும் இந்த அமேசான் சேல் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அமேசான் குடியரசு தின சேல் எப்போது தொடங்கிறது? இதில் எந்தெந்த பொருட்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன? முழு விவரத்தையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Amazon Great Republic Day Sale: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தொடக்க தேதி
அமேசானின் கிரேட் குடியரசு தின விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். ஆனால் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் 12 மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது ஜனவரி 13 நள்ளிரவு 12 மணி முதல் விற்பனையில் பொருட்களை வாங்க முடியும். தற்போது, இந்த சேலுக்கான விற்பனை பேனர் அமேசான் செயலியில் மட்டுமே தெரிகிறது. எனினும், விரைவில் வலைத்தளத்திலும் இது தெரியும். இந்த விற்பனையில் கிடைக்கும் குறிப்பிட்ட சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் பற்றிய தகவல்கள் விற்பனை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் வழங்கப்படும்.
Amazon Great Republic Day Sale: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் கிடைக்கும் வங்கிச் சலுகைகள்
வாடிக்கையாளர்கள் அமேசானின் கிரேட் குடியரசு தின விற்பனையில் பல கவர்ச்சிகரமான வங்கிச் சலுகைகளைப் பெறலாம். SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி கிடைக்கும். இதில் EMI பரிவர்த்தனைகளும் அடங்கும். ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், டிவி போன்றவற்றிலும் நல்ல சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமேசான் சேலில் எதிர்பார்க்கப்படும் சில சிறந்த சலுகைகளை பற்றி இங்கே காணலாம்:
– வீடு, சமையலறை மற்றும் அவுட்டோர் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 50% தள்ளுபடி, அமேசான் பிராண்டுகளில் 75% வரை தள்ளுபடி.
– ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் TWS இயர்பட்ஸ் போன்ற மின்னணு பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி.
– டிவிகள் மற்றும் ப்ரொஜெக்டர்களுக்கு 65% வரை தள்ளுபடி.
– அலெக்சா மற்றும் ஃபயர் டிவி சாதனங்களுக்கு 35% வரை தள்ளுபடி.
– மொபைல் போன்கள் மற்றும் பாகங்கள், சலவை இயந்திரங்கள், அதாவது வாஷிங் மெஷின்களுக்கு 40% வரை தள்ளுபடி.
– குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஏசிகளுக்கு 65% வரை தள்ளுபடி.