சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து.. மெளனம் கலைத்த சாஹல்!

Yuzvendra Chahal: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் – யூடியூபரும் நடனக் கலைஞருமான தனஸ்ரீ வர்மா கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இருவரும் விவகாரத்து செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இது குறித்து இருவரும் ஏதும் பேசாத நிலையில், நேற்று சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் மௌனம் கலைத்துள்ளனர்.

சாஹலின் உருக்கமான பதிவு

இது தொடர்பாக யுஸ்வேந்திர சாஹல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளதாவது, “எனது ரசிகர்களின் அசைக்க முடியாத அன்பும் ஆதரவும் இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த உச்சத்தை அடைந்திருக்க முடியாது. 

எனது பயணம் இன்னும் முடிவடையவில்லை. எனது நாட்டிற்கும், அணிக்கும், ரசிகர்களுக்கும் இன்னும் செய்ய வேண்டியது மீதமுள்ளது. நான் ஒரு விளையாட்டு வீரராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். 

அதேநேரத்தில் ஒரு மகனாக, சகோதரனாக, நண்பராக ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளப் பலரும் ஆர்வமுடன் இருக்கிறீர்கள். அதேபோல் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு ஊடகங்கள் எழுதுகிறீர்கள். 

அது உண்மையாகவும் இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்? எனவே ஒரு சகோதரனாக எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை யாரும் ஊக்குவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய வலியைத் தருகிறது. 

மற்றவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய குடும்பத்திலிருந்து வந்தவன் நான். இந்த உயர்வுக்கு என்னுடைய உழைப்பே காரணம். குறுக்குவழியில் நான் வரவில்லை. உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு வேண்டுமே தவிர உங்களது இரக்கம் எனக்கு வேண்டாம். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபியில் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்… பெருமூச்சு விடும் எதிரணிகள்

தனஸ்ரீ வர்மாவின் பதிவு

அதேபோல் தனஸ்ரீ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கடந்த சில நாட்கள் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. உண்மையில் மனமுடையச் செய்தது. ஆதாரமற்ற எழுத்துக்கள் மற்றும் உண்மை என்னவென்று தெரியாமல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், குணங்களைப் படுகொலை செய்யும் வகையிலும் வெறுப்பை பரப்பியது தான் காரணம். நான் இந்த இடத்திற்கு வருவதற்கு கடுமையாக உழைத்துள்ளேன். 

நான் மெளனமாக இருப்பது எனது பலவீனத்துக்கான அறிகுறி அல்ல. இணையதளத்தில் என்னை குறித்து எதிர்மறையான செய்திகளை பரப்பினாலும் அதிலிருந்து மீள தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. 

உன்மை எதுவோ அதில் கவனம் செலுத்தி முன்னேறிச் செல்ல விரும்புகிறேன். உண்மை எப்போதும் உயர்ந்து நிற்கும். ஓம் நமச்சிவாய” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் படிங்க: இந்தியா vs இங்கிலாந்து: டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.