மெல்போர்ன்,
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் விளையாடினார். இந்த போட்டியில் சாம் கான்ஸ்டாஸ் 113 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக நீடிப்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எல்லா முறையும் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்தால் அவரால் நீண்ட காலத்துக்கு தொடக்க ஆட்டக்காரராக நீடிக்க முடியாது.
முதல் இரு போட்டிகளில் விளையாடியதிலிருந்து அவர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வார் என நினைக்கிறேன். மெல்போர்ன் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார். நிறைய இளம் வீரர்களை பார்த்துள்ளேன். அவர்கள் அணிக்குள் வரும்போது அனைத்து விஷயங்களிலும் சிறிது அதீத ஆர்வமாக இருப்பார்கள்.
அவர்கள் யார் என்பதையும், சர்வதேச அரங்கில் எந்த மாதிரியான வீரர்களை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதையும், சில போட்டிகளில் விளையாடிய பிறகே அவர்கள் அதில் கவனம் கொடுக்க தொடங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.