சென்னை தமிழக அமைச்சர் மீதான மாநகராட்சி கூட்ட மோதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் கடந்த 29.8.2002 அன்று அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றபோது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சென்னை கண்ணப்பர் திடலில் மீன் அங்காடி அமைக்கும் டெண்டர் தொடர்பான பிரச்சினையை கிளப்பியது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றியதால் தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்த ‘மைக்’ மற்றும் நாற்காலிகளை அ.தி.மு.க. […]