காஞ்சிபுரம் இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை என பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறி உள்ளார். கடந்த மாதம்ம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்., அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய அஸ்வின், அங்கிருந்த மாணவர்களிடம் உங்களில் தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் யார்? என்று கேட்டார். […]