எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்!

டெக்சாஸ்: எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக வலைத்தளத்துக்கு வெளியே இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்கின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த செயலியை எக்ஸ் ஏஐ வடிவமைத்துள்ளது. பயனர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உரையாடல் பாணியில் இந்த செயலி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களை உருவாக்கவும், உரையைச் சுருக்கவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும்.

எக்ஸ் தள பயனர்களுக்கு ஏஐ அசிஸ்ட்டண்ஸ் வழங்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் இது அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக எக்ஸ் தளத்தில் ப்ரீமியம் சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகமானது. தற்போது எக்ஸின் ஏஐ அசிஸ்டண்ட்டை கட்டணமின்றி பயன்படுத்தலாம். இருப்பினும் இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 10 ரெக்வெஸ்ட், நாள் ஒன்று மூன்று படங்கள் மட்டுமே பயனர்கள் பெற முடியும். இது செயலி வடிவில் பயன்படுத்தும் பயனர்களுக்கும் அடங்கும்.

ஆப்பிள், கூகுள், எக்ஸ் கணக்கு, மின்னஞ்சல் முகவரி என ஏதேனும் ஒரு பயனர் ஐடி-யை பயன்படுத்தில் இந்த செயலிக்குள் லாக்-இன் செய்து பயன்படுத்தலாம். தகவலின் துல்லியம் மற்றும் இமேஜ் அவுட்புட் என மற்ற ஏஐ பாட்கள் எதிர்கொண்டு வரும் சவாலை Grok ஏஐ-யும் எதிர்கொண்டு வருகிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்த செயலி பயனர்கள் பயன்படுத்த எளிதாக இருப்பதாக தகவல். அந்த வகையில் இது பரவலான பயனர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு சில நாடுகளில் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும். இப்போதைக்கு இந்த செயலியை ஆப்பிள் போன் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.