சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 12வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட […]