Neeraj Chopra: ‘Track and Field News’ என்ற அமெரிக்க பத்திரிக்கையில் 2024ஆம் ஆண்டின் உலகின் சிறந்த ஆண் ஈட்டி எறிதல் வீரராக இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் தனது வாழ்க்கையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.
27 வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது உட்பட பல்வேறு சிறப்புச் செயல்திறனுக்குப் பின் அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார். இந்த Track and Feild News பத்திரிக்கையில் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து கிரேனேடியன் ஈட்டி எறிதல் வீரரான ஆன்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாவது இடத்தையும் செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ் மூன்றாவது இடத்தையும் ஜெர்மனின் வீரர் ஜூலியன் வெபர் நான்காவது இடத்தையும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 5வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும், இந்த வரிசையின் 6வது இடத்தில் பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டர் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடர்! இந்த மூன்று வீரர்களை கழட்டிவிடும் பிசிசிஐ!
More recognition for Neeraj Chopra!
Track & Field News, a renowned US based sports magazine, has honoured @Neeraj_chopra1 as the best Javelin thrower of 2024.
A proud moment for India as he continues to raise the bar!#Sports #IndianSports #NeerajChopra #champion pic.twitter.com/Q6zvjRWG6J
— SAI Media (@Media_SAI) January 10, 2025
நீரஜ் சோப்ராவின் சாதனைகள்
2012ஆம் ஆண்டு முதல் சுமார் 70 போட்டிகளில் விளையாடிய அவர் 38 போட்டிகளில் வென்றுள்ளார். 56 போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளார். 2016ல் 20 வயதுக்குட்படோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார்.
தொடர்ந்து நீரஜ் சோப்ரா 2021இல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதில் இருந்து அவர் சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றது என அவரது சாதனைகள் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது மகுடத்தில் மற்றொரு வைரத்தைப் பதித்துக் கொண்டார்.
இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக விளங்கும் நீரஜ்
நீரஜ் சோப்ராவின் இச்சாதனைக்கு அவரது கடின உழைப்பும் விடாமுயற்சியுமே காரணம். அவரது இந்த பயணம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் எண்ணற்ற சாதனைகளைச் சாதிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அவரது வெற்றி இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பது மட்டுமல்லாது எண்ணற்ற இளைஞர்கள் தங்களை இலக்கை உறுதியுடன் தொட ஊக்குவிக்கிறது.
எளிய மனிதர்களின் நாயகன்
விளையாட்டு உலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும், எளிய குடும்பத்திலிருந்து வந்து எண்ணற்ற சாதனை படைத்து எளிய மனிதர்களின் நாயகனாகத் திகழ்கிறார் நீரஜ் சோப்ரா.
மேலும் படிங்க: இனி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பில்லை… கேப்டனை மாற்றுமா சிஎஸ்கே?