சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நடப்பாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. வழக்கமாக தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டும் ஆளுநர் அவைக்கு வருகை தந்தார். ஆனால், அவையில், தேசியகீதம் இசைக்கப்படவில்லை என கூறி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவம் பெரும் […]