MadhaGajaRaja: “லேட்டாக வந்தாலும் இந்த பொங்கலோட ஹீரோ இந்த MGRதான்!'' – வசனகர்த்தா வெங்கட் ராகவன்

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கிற `மதகஜராஜா’ திரைப்படம் பொங்கல் ரிலீஸாக நாளை வெளியாகிறது.

2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு இத்திரைப்படத்தை வெளியிட இத்திரைப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டார். ஆனால், சில தாமதங்களால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைப்படம் வெளியாகிறது. சுந்தர்.சி-யுடன் திரைக்கதை மற்றும் வசன பணிகளில் நீண்ட ஆண்டுகளாக பயணிப்பவர் வெங்கட் ராகவன். அரண்மனை 1,2,3,4, ஆம்பள, கலகலப்பு என சுந்தர்.சி-யின் பல படங்களுக்கும் வசனம் எழுதிய இவருக்கு வசனகர்த்தாவாக முதல் திரைப்படம் `மதகஜராஜா’தான். ஆதலால், இந்தப் படம் இவருக்கும் கூடுதல் ஸ்பெஷல்.

படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடையே பகிர்ந்துக் கொண்ட வசனக்கர்த்தா வெங்கட் ராகவன், “படம் ரிலீஸாகுது…எல்லா வேலைகளுமே ஒரு வாரத்துக்குள்ள முடிஞ்சிடுச்சு. இந்த மாதிரி ஐடியா இருக்கிறதாக சொன்னதும் சுந்தர்.சி சார் அனைத்து ஸ்டெப்ஸையும் எடுத்து வேலைகளைப் பார்த்துட்டார். சொல்லப்போனால், இந்த படத்துல வேலை பார்த்த அனைவருக்குமே `மதகஜராஜா’ திரைப்படம்கூட ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கு. பாருங்க, அதனாலதான் இத்தனை வருஷம் கழிச்சு படம் ரிலீஸாகப்போகுதுனு எல்லோரும் ப்ரோமோஷன் நிகழ்வுக்கு வந்துட்டாங்க. நான் இந்தப் படத்துக்கு முன்னாடியே சுந்தர்.சி சாரோட `நகரம் மறுபக்கம்’ போன்ற படங்கள்ல ஸ்கிரிப்ட் வேலை பார்த்திருக்கேன்.

Venkat Ragavan with Sundar.C

ஆனால், ஒரு முழு திரைப்படத்துக்கும் வசனம் எழுத தொடங்கினது `மதகஜராஜா’ திரைப்படத்தில இருந்துதான். அதுனால எனக்குமே இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல். இந்தப் படத்துக்குப் பிறகுதான் சுந்தர்.சி சார் எனக்கு `தீயா வேலை செய்யணும் குமாரு’, `அரண்மனை நான்கு பாகங்கள்’, `கலகலப்பு’, `ஆம்பள’ போன்ற அத்தனை படங்களுக்கும் என்னை கூப்பிட்டாரு. இந்த பயணங்களுக்கு விதைப்போட்டது `மதகஜராஜா’தான். இந்த படம் வரலைனு வருத்தம் இருந்தது. ஆனால் இப்போ அந்த வருத்தம் போயிடுச்சு.” என்றவர் படத்தின் ஆரம்பக்கட்ட ஸ்கிரிப்ட் வேலைகள் தொடர்பாக விவரித்தார்.

அவர், “ முதல்ல இந்தப் படத்துல விஷாலுக்கு டிரிஃபிள் ஆக்ஷன்தான் பிளான் பண்ணினோம். அதனாலதான் டைட்டிலை `மத கஜ ராஜா’னு வச்சோம். ஆனால், டைரக்டருக்கு 80ஸ்ல வந்த கமர்ஷியல் படம் மாதிரி பண்ணனும்னு ஆசை இருந்தது. அப்புறம் ஸ்கிரிப்ட் வேலைகளை அதுக்கேற்ப மாத்தி இப்போவுள்ள வெர்ஷனுக்கு எடுத்துட்டு வந்தோம். இந்தப் படத்துக்கான வேலைகள்ல உட்காரும்போதே ஒரு முழு கமர்ஷியல் படமாகதான் பண்ணனும்னு சுந்தர்.சி சார் ஐடியாவாக சொன்னாரு. இந்தப் படத்துல ஆக்ஷன், எமோஷன், சென்டிமென்ட், காமெடினு அத்தனை எலமென்ட்களும் இருக்கும். படம் இப்போதும் ரொம்ப ஃப்ரஸாக இருக்கு. இப்போ மறுபடியும் கலர் கிரேட் பண்ணியிருக்கோம்.

Venkat Ragavan with Sundar.C

இது விஷுவல் டிரீட்டாக இருக்கும். அப்போதே நாங்க படத்தை முன்னணி தொழில்நுட்பங்களை வச்சிதான் பண்ணினோம். அது இப்போ சரியாக பொருந்திப் போயிடுச்சு. இந்தப் படத்தை நாங்க தொடங்கும்போது பேன் இந்தியா கலாச்சாரம் அவ்வளவு பெரியதாக இல்ல. ஆனால், நாங்க அப்போதே இந்தியிலிருந்து சோனு சூட், தெலுங்குல இருந்து சுப்பாராஜுனு பலரை வச்சு இந்தப் படத்தை பண்ணினோம். படத்துல இன்னும் மற்ற மொழி நடிகர்களும் இருக்காங்க.” என்ற அவர், “ `மதகஜராஜா’ படத்துக்கு ஷார்ட்டாக `MGR’னு பெயர் வச்சோம். சினிமாவுக்கு எம்.ஜி.ஆர் லேட்டாக வந்து ஹீரோவானாருனு சொல்வாங்க. அதே மாதிரி லேட்டாக வந்தாலும் இந்த `MGR’தான் இந்த பொங்கலோட ஹீரோ.” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.