சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட் மற்றும் மறைந்த நடிகர்களான மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 வருடங்களுக்குப் பிறகு இன்று திரையில் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே நேற்று (ஜனவரி 11)மதகஜராஜா திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அந்தக் காட்சிக்கு குஷ்புவும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்புவிடம் சுந்தர் சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த குஷ்பு, ” என் வீட்டுக்காரருக்கு திருஷ்டிதான் சுத்திப் போடணும். கண்ணு வெச்சுடாதீங்க ப்ளீஸ். இந்தப் படத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல.
ஆனா ஒரு விஷயம் 12 வருஷத்துக்கு முன்னாடி அவர் இந்தப் படத்துக்கு எவ்வளவு உழைச்சாருன்னு எனக்குத் தெரியும். அதற்கான வரவேற்பை நீங்க இப்பக் கொடுக்குறீங்க. இந்தப் படத்தைப் பார்க்கும்போது 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம் மாதிரி இல்ல. இப்ப எடுத்த படம் மாதிரிதான் இருக்கு. சுந்தர் சியை என்டர்டெயின்மென்ட் கிங்னு சொல்லுவாங்க. அதை மறுபடி மறுபடி நிருபிச்சுக்கிட்டே இருக்காரு.அதனால வீட்டுக்குபோய் எங்க அத்தைகிட்ட திருஷ்டி எடுக்க சொல்லணும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.