ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்: நாட்டின் பிரபல தொழிலதிபரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி ஜியோ பயனர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளார். நீங்கள் JioFiber அல்லது JioAirFiber பயனராக இருந்தால், உங்களுக்காக சிறப்பு செய்தி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ், 2 ஆண்டுகளுக்கு YouTube Premium வசதியை இலவசமாக அனுபவிக்கலாம். யூடியூப் பிரீமியம் கட்டணச் சேவை இலவசம் என்பதாலும், இதற்கான கட்டணம் மாதம் ரூ.149 என்பதாலும், ரிலையன்ஸ் ஜியோவின் இந்தச் சலுகை முக்கியத்துவம் பெறுகிறது. ஜியோவின் இந்த ஆஃபர் மூலம் 2 ஆண்டுகளில் சுமார் 3600 ரூபாய் சேமிக்க முடியும். ஜியோவின் இந்த ஆஃபர் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், JioFiber மற்றும் JioAirFiber இணைப்பின் சில சிறப்புத் திட்டங்களைப் பெறும் வாடிக்கையாளர்கள் 24 மாதங்களுக்கு அதாவது 2 ஆண்டுகளுக்கு முற்றிலும் இலவசமாக YouTube Premium மெம்பர்ஷிப்பைப் பெறுவார்கள். யூடியூப் பிரீமியத்தில், எந்த விளம்பரமும் இல்லாமல் வீடியோக்களைப் பார்ப்பது, வீடியோக்களைப் பதிவிறக்குவது மற்றும் பின்னணியில் இசையைக் கேட்பது போன்ற பல வசதிகளைப் பெறுவீர்கள். இது தவிர, யூடியூப் மியூசிக் பிரீமியத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களைக் கேட்கலாம்.
இலவச யூட்யூப் ப்ரீமியம் சலுகை எந்த திட்டங்களில் கிடைக்கும்?
யூட்யூப் ப்ரீமியம் சலுகை ரூ.888, ரூ.1199, ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3499 திட்டங்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால், YouTube பிரீமியத்தின் 24 மாதங்களுக்கு இலவச சந்தாவைப் பெறுவீர்கள். இந்தச் சலுகை ஜனவரி 11ஆம் தேதி முதல் அறிமுகமாகியது.
சலுகையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது
யூட்யூப் ப்ரீமியம் சலுகையை செயல்படுத்த நீங்கள் MyJio செயலிக்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் YouTube பிரீமியம் பேனரைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்து உங்கள் YouTube கணக்கில் உள்நுழைவதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறலாம். ஜியோவின் செட்-டாப் பாக்ஸ் உட்பட அனைத்து சாதனங்களிலும் இந்த சேவையை அணுக முடியும்.