இந்தியாவில் மிக வேகமாக பிரபலமாகி வருகின்ற எலெக்ட்ரிக் கார் மாடலான எம்ஜி வின்ட்சர் இவி காரின் விலை வேரியண்ட் வாரியாக ரூ.50,000 உயர்த்தப்பட்டும், BAAS முறையில் வாங்குபவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கான சார்ஜிங் ரூ.3.90 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட மூன்று மாதங்களில் அமோகமான வரவேற்பினை பெற்று 10 ஆயிரத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் சாலையில் வின்ட்சர் இவி ஓடிக்கொண்டிருக்கின்றன, இந்நிலையில் ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்த முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகை நிறைவுற்றதை தொடர்ந்து தற்பொழுது வேரியண்ட் […]