லக்னோ உத்தரப்பிரதேச அரசு ஹெல்மெட் அணிவோருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் அனுப்பி உள்ள கடிதத்தில். “சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் இந்த உயிரிழப்புகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் […]