புதுடெல்லி: ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானை சேர்ந்த 60 சதவீத தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஜம்மு காஷ்மீர் பிராந்தியங்களில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளில் 80 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். தற்போது, தீவிரவாதத்தில் இருந்து சுற்றுலா (டெர்ரரிசம் டு டூரிஸம்) என்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இவ்வாறு தலைமை தளபதி கூறினார்.