அகமதாபாத் நேற்று மகர சங்கராந்தியை மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுமக்களுடன் இணைந்து பட்டம் விட்டு கொண்டாடி உள்ளார். நேற்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைப்போல், வட இந்தியாவில் நேற்றைய தினம் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மகர சங்கராந்தி என்பது சூரியன் வடக்கு நோக்கி திரும்பும் போது அவரை வரவேற்கும் திருநாள் ஆகும். சூரியனை வரவேற்க அங்குள்ள மக்கள் வானில் பட்டம் விட்டு கோலாகலமாக கோண்டாடுவது வழக்கம் ஆகும் […]