பலரின் ஃபேவரிட் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான இவர், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார் .அதே சமயம் கரியர் கிராஃப் உச்சத்தை நோக்கி நகரும்போதே முன்னணி கதாபாத்திரங்களை தாண்டி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்தார். வில்லனாக பாலிவுட் வரை முத்திரை பதித்தார்.
இப்படியானவர் `ஆரஞ்ச் மிட்டாய்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும் உருவெடுத்தார்.
பிக் பாஸ் புகழ் ராஜூ கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்’ படத்திலும் பாடலை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. `ராம் காம்’ திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையில் `ஆரஞ்ச் மிட்டாய்’ திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடி பாடகராக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்ல, அந்த இரண்டு பாடல்களையும் எழுதியது இவர்தான்.
`பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தில் மொத்தமாக இரண்டு பாடல்களை விஜய் சேதுபதி எழுதியிருக்கிறார். இதில் ஒரு பாடலை நடிகர் சித்தார்த் மற்றும் `காவாலா’ புகழி பாடகி ஷில்பா ராவ் பாடியுள்ளனர். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் `பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்றிருந்த ராஜுவும் விஜய் சேதுபதி எழுதியிருக்கிற பாடல் தொடர்பாக அங்கு பேசியிருந்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…